பாரீஸ் நதி நீரின் தரம் குறித்து சந்தேகம்: பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து திட்டமிட்டது முதலே, நீச்சல் போட்டிகள் நடத்தப்படும் நதி நீரின் தரம் குறித்து கேள்வி எழுந்தது.
நதி நீரில் மோசமான கிருமிகள் இருக்கலாம் என்பதால் சில நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றம்
ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக் ட்ரையத்லான் போட்டிகளை சர்ச்சைக்குரிய Seine நதியில் நடத்துவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.
வானிலை முன்னறிவிப்பின்படி விரைவில் மழை பெய்யக்கூடும் என தெரியவந்துள்ளதாலேயே நீச்சல் போட்டிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், மழை பெய்து நதியில் நீரின் அளவு அதிகரித்தால், நீரின் வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரித்தால், அந்த வெப்பநிலை கிருமிகள் இனப்பெருக்கம் செய்ய சாதகமாக அமையும்.
ஆகவே, செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடப்பதாக இருந்த நீச்சல் போட்டிகளை, ஒரே நாளில், அதாவது, செப்டம்பர் 1ஆம் திகதியே நடத்தி முடிப்பதென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |