எதிர்த்துப் போராடுங்கள்... கனடாவில் பரபரப்பை உருவாக்கிவரும் ஒரு செய்தி
Ontario Premier Doug Ford says, he wants to see legal changes to address a spate of home invasions: வீட்டுக்குள் அத்துமீறி நுழைபவர்கள் விடயத்தில் நடவடிக்கை எடுக்க ஏதுவாக சட்டத்தில் மாற்றங்கள் செய்ய விரும்புவதாக ஒன்ராறியோ பிரீமியர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை அதிகாலை 2.40 மணியளவில், ரொரன்றோவிலுள்ள ஒரு வீட்டுக்குள் சிலர் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்துள்ளார்கள்.
எதிர்த்தவருக்கு நேர்ந்த துயரம்
அந்த வீட்டில் நான்கு பேர் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், மைக்கேர் எக்கெர்ட் (39) என்பவர், தன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களை எதிர்த்து நிற்க, வந்தவர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்கள்.

மைக்கேல், அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட ஒரு இசைக்கலைஞர் ஆவார்.
தகவலறிந்த பொலிசார் மைக்கேலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, இப்படி வீட்டுக்குள் அந்நியர்கள் அத்துமீறி நுழையும் விடயம் பேசுபொருளாகிவரும் நிலையில், இந்த விடயம் கனடாவில் பரபரப்பை உருவாக்கிவருகிறது.
எதிர்த்துப் போராடுங்கள்...
இந்நிலையில், இப்படி வீட்டுக்குள் யாராவது நுழைந்தால் பதுங்காதீர்கள், எதிர்த்துப் போராடுங்கள் என்று கூறியுள்ளார் ஒன்ராறியோ பிரீமியரான டக் ஃபோர்ட் (Doug Ford).

மேலும், என் வீட்டுக்குள் யாராவது கையில் கத்தி அல்லது துப்பாக்கியுடன் நுழைந்தால், வாசலில் வைத்தே அந்த நபரை சட்னியாக்கிவிடுவேன் என்றும் கூறியுள்ளார் ஃபோர்ட்.
அத்துடன், இப்படி வீடுகளுக்குள் அத்துமீறி நுழைபவர்கள் விடயத்தில் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்புவதாகவும் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஃபோர்டின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இப்படிப்பட்ட சம்பவங்களின்போது, பொலிசாரை அழைப்பதே சரி என அரசியல்வாதிகள் சிலர் கூற, பொலிசாரும் அதை ஆமோதித்துள்ளார்கள்.
இப்படி திருடுவது போன்ற தவறான நோக்கங்களுடன் வீடுகளுக்குள் நுழைவோரால் உயிர் பலி வரை ஏற்படும் விடயங்கள் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது மைக்கேல் கொல்லப்பட்ட விடயம் கனடாவில் பெரும் பேசுபொருளாகிவருறது.