மீனாவின் கணவருக்கு எமனான புறாவின் எச்சம்! இப்படியொரு நோய் உள்ளதா? எச்சரிக்கை தகவல்
நடிகை மீனாவின் கணவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புக்கு புறாவின் எச்சம் காரணமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் அது தொடர்பிலான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.
இந்நிலையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்காததால், தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க் கிழமை உயிரிழந்தார். இந்நிலையில் மீனாவின் கணவருக்கு, புறாக்களின் எச்சத்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறபோது உண்டாகக் கூடிய நோய். இது குறித்து பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர் எஸ். தினகரன், புறா எச்சத்தால் தொற்று ஏற்படுமா என்றால், ஆம் என்கிறது அறிவியல்.
புறா மட்டுமல்ல வௌவால்களின் எச்சத்திலும் ஹிஸ்டோப்பிளாஸ்மா கேப்சுலாட்டம் (Histoplasma capsulatum) என்ற பூஞ்சைகள் இருக்கலாம். இவற்றின் ஸ்கோர்கள் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டவை.
இதன் எச்சங்கள் காய்ந்த பிறகு பொடியாகி மென்ற தூசிகள் காற்றில் கலக்கும் வாய்ப்புள்ளது. இவை ஏற்படுத்தும் தொற்று தான் ஹிஸ்டோப்ளாஸ்மாசிஸ் (Histoplasmosis). இதனால் நுரையீரல் பாதிப்படைய வாய்ப்புண்டு என கூறியுள்ளார்.
பெங்களூரில் வித்தியாசாகர் வீட்டின் பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு சுவாசப் பிரச்னை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.