பிரித்தானிய மகாராணியாரின் கணவர் அடக்கம் செய்யப்படும் முன்.. பிரதமர் இல்லத்தில் நடந்த பார்ட்டி

boris johnson united kingdom queen elizabeth prince philip dead
By Balamanuvelan Jan 14, 2022 10:30 AM GMT
Report

கணவனை இழந்த பிரித்தானிய மகாராணியார் பொதுமுடக்க விதிகளை மீறக்கூடாது என்பதற்காக அருகில் யாருமின்றி தனிமையில் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் இல்லத்தில் பார்ட்டி ஒன்று நடந்துகொண்டிருந்ததாக அதிரவைக்கும் குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்தினம், பிரதமர் இல்லத்தில் மதுபான பார்ட்டி ஒன்று நடந்துள்ளது.

அரசின் ஆலோசகர்களும், அரசு ஊழியர்களும் எக்கச்சக்கமாக மது அருந்திவிட்டு பிரதமர் இல்ல அடித்தளத்திலும் தோட்டத்திலும் நடனமாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

2021 ஏப்ரல் 26 அன்று, பிரதமர் இல்லத்தின் இரு பகுதிகளில் இரண்டு பார்ட்டிகள் நடந்ததாகவும், சுமார் 30 பேர் பார்ட்டிகளில் பங்கேற்றதாகவும், பின்னர் அனைவரும் தோட்டத்தில் கூடியதாகவும் நடந்தவற்றைக் கண்ணால் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளார்கள்.

பிரித்தானிய மகாராணியாரின் கணவர் அடக்கம் செய்யப்படும் முன்.. பிரதமர் இல்லத்தில் நடந்த பார்ட்டி | Downing Street Staff Partied Queen Grieved Alone

பார்ட்டியில் மதுபானம் பெருக்கெடுத்து ஓடியதால், அதாவது எகக்சக்கமான மது அருந்திக்கொண்டு நடனமாடியதால் பிரதமர் இல்லத்தின் அடித்தளத்தில் போடப்பட்டிருந்த கார்ப்பெட்டில் மது கொட்டி அது நனைந்ததால், நள்ளிரவில் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் அந்த அறையை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

அன்றைய தினம், பிரித்தானியாவே இளவரசர் பிலிப்பின் மரணத்துக்காக துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருந்தது.

அப்போது நாட்டின் இரண்டாம் கட்ட பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருந்ததால், பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலை இருந்தது.

அடுத்த நாள், பிரித்தானிய மகாராணியாரும் கட்டுப்பாடுகள் காரணமாக விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கருப்பு நிற உடையணிந்து முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்து தனிமையில் அமர்ந்து துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருந்தார்.

பிரித்தானிய மகாராணியாரின் கணவர் அடக்கம் செய்யப்படும் முன்.. பிரதமர் இல்லத்தில் நடந்த பார்ட்டி | Downing Street Staff Partied Queen Grieved Alone

ஆனால், முந்தைய தினம் பிரதமர் இல்லத்தில் விதிகளை மீறி பார்ட்டி நடந்திருக்கிறது. போரிஸ் ஜான்சன் பதவியேற்றதிலிருந்தே அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

அவரது மனைவி பொதுமக்கள் பணத்தில் வீட்டை அலங்கரித்ததில் துவங்கி தற்போது மகாராணியாரே துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருந்தபோது அவர் வீட்டில் பார்ட்டி நடந்தது வரை எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால் அவரது பிரதமர் பதவிக்கு பிரச்சினை ஏற்படலாம் என கருதப்படுகிறது. 

மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US