வாட்ஸ்அப்பில் ஆதார், பான் கார்டு எளிதில் டவுன்லோட் செய்யும் புதிய வசதி
இந்தியாவில் ஆதார் கார்டு (Aadhar Card) மற்றும் பான் கார்டு (Pan Card) மிக முக்கியமான ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.
இவை இல்லாமல் எந்த சேவையையும் பெற முடியாது. அரசாங்க திட்டங்கள் முதல் சின்ன சிம் கார்டு வாங்குவது வரை, இந்த ஆவணங்கள் அவசியமாக்கப்பட்டுள்ளன.
இப்போது, உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை எப்போதும் கையில் வைத்திராவிட்டாலும், அதை வாட்ஸ்அப்பிலேயே (Whatsapp) எளிதாக டவுன்லோடு செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு, முதலில் “My Gov” வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணை (9013151515) உங்கள் மொபைலில் Save செய்ய வேண்டும்.
பிறகு, அந்த நம்பருக்கு “Hi” என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
பதிலுக்கு, நமஸ்தே என்று தொடங்கும் ஆட்டோமேட்டிக் மெசேஜ் உங்களுக்கு வரும். அந்த மெசேஜின் இறுதியில் Cowin services, DigiLocker services என 2 சர்வீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
நீங்கள்அதில் DigiLocker சேவைகளைத் தேர்ந்தெடுத்து, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ என்டர் செய்து, ஆதார் அல்லது பான் கார்டை எளிதில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த வசதி, ஆவணங்களை எளிதாக அணுகுவதற்கும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Aadhaar Card Download WhatsApp | PAN Card Download via WhatsApp | DigiLocker services on WhatsApp | MyGov WhatsApp helpline |ஆதார் கார்டு வாட்ஸ்அப் மூலம் டவுன்லோடு | பான் கார்டு டவுன்லோடு வாட்ஸ்அப் | டிஜிலாக்கர் சேவை வாட்ஸ்அப்