உங்கள் ஏஜண்ட் உண்மையானவரா மோசடியாளரா? கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு பயனுள்ள ஒரு செய்தி
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் கனடாவுக்கு புலம்பெயர்கின்றனர்.
அதைப் பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்து அப்பாவிகளை ஏமாற்றுவோரும் இருக்கிறார்கள். ஆக, புலம்பெயர்தலுக்கு உதவும் ஏஜண்டுகள் குறித்து சரியான அறிவை அளிப்பது இந்த மோசடிகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதோடு சரியான ஏஜண்டுகளை தேர்ந்தெடுக்கவும் உதவும் என்பது நிச்சயம்.
Immigration Consultants of Canada Regulatory Council (ICCRC department Canada) என்னும் ஒழுங்கு முறை அமைப்பு, இத்தகைய போலி ஏஜண்டுகளைக் கண்டுபிடித்து அவர்களை கண்டிக்கிறது அல்லது தண்டிக்கிறது.
எப்படியாகிலும் வெளிநாடு சென்று உழைத்து தன் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்படும் ஒருவர், இப்படிப்பட்ட மோசடி ஏஜண்டுகளிடம் சிக்கிக்கொண்டால் அவரது நிலைமை என்னவாகும்? காலத்துக்கும் மீளாத ஒரு துயரத்தில் அவர் சிக்கிக்கொள்ளக்கூடும். இப்படி மோசடியாளர்களை நம்பி ஏமாந்த இந்தியர்கள் பலரது வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளன.
இதுவரை ICCRC department Canadaவால் தண்டிக்கப்பட்ட ஏஜண்டுகள் 44 பேர்!
அவற்றில், Abhinav Outsourcings PVT Ltd என்ற நிறுவனத்தைச் சார்ந்த Mr. Ajay Sharma, Harinder Kaur Kang, Kuldeep Bansal மற்றும் Rajesh Randev, Sumit Sen மற்றும் Sharandeep Singh Mann ஆகியோரது பெயர்கள் ICCRC department Canadaவால் தண்டிக்கப்பட்ட ஏஜண்டுகள் என்ற பட்டியலின் கீழ் ICCRC இணையதளத்தில் உள்ளன.
சரியான ஒரு புலம்பெயர்தல் ஆலோசகரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
- அவர் ICCRCயில் பதிவு செய்த, உரிமம் பெற்ற ஒரு ஆலோசகராக இருக்கவேண்டும்.
- அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டோ, அபராதம் விதிக்கப்பட்ட பின்னணியோ இருக்கக்கூடாது.
- சட்டப்படி அவர் ஒப்பந்தம் செய்பவராக இருக்கவேண்டும்.
- உண்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்டவராக இருக்கவேண்டும்.
- அவர் தெளிவான தகவல்களை உங்களுக்கு அளிப்பதுடன், நியாயமான கட்டணம் வசூலிப்பவராகவும் இருக்கவேண்டும் என்பது அவசியம் ஆகும்.