தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.., எந்த மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கம்?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்(SIR) நிறைவடைந்திருக்கின்றன.
இதில் உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் மொத்தம் 97,37, 832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
வெளியான பட்டியல்
- சென்னை- 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- கோவை- 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- சேலம்- 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- திருவள்ளூர்- 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- காஞ்சிபுரம்- 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- தஞ்சாவூர்- 2.06 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- நெல்லை - 2.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- திருச்சி- 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- கரூர்- 79.690 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- நாமக்கல்- 1.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- தென்காசி- 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- தேனி- 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- விழுப்புரம்- 1.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- அரியலூர்- 24, 368 வாக்காளர்கள் நீக்கம்
- தருமபுரி- 81,515 வாக்காளர்கள் நீக்கம்
- கடலூர்- 2.46 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- கிருஷ்ணகிரி- 1.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- நாகபட்டினம்- 57,338 வாக்காளர்கள் நீக்கம்
- செங்கல்பட்டு- 7.1 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- திருப்பூர்- 5.63 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- திருவண்ணாமலை- 2.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- ராணிப்பேட்டை- 1.45 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- விருதுநகர்- 1.89 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- தூத்துக்குடி- 1.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- புதுக்கோட்டை- 1.39 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- சிவகங்கை- 1.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- ஈரோடு- 3.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- மதுரை- 3.80 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- கன்னியாகுமாரி- 1.53 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- பெரம்பலூர்- 49,548 வாக்காளர்கள் நீக்கம்
- இராமநாதபுரம்- 1.17 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- திருவாரூர்- 1.29 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- நீலகிரி- 56, 091 வாக்காளர்கள் நீக்கம்
- திண்டுக்கல்- 3.24 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- மயிலாடுதுறை- 75, 378 வாக்காளர்கள் நீக்கம்
- கள்ளக்குறிச்சி- 84, 329 வாக்காளர்கள் நீக்கம்
- திருப்பத்தூர்- 1.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- வேலூர்- 2.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |