சுவாசத்தின் மூலம் புற்றுநோயை கண்டறியும் தட்டான் பூச்சி
தும்பி என்று அழைக்கப்படும் தட்டான் பூச்சிகளால் சுவாசத்தின் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஒருவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பதை சுவாசத்தின் மூலம் அடையாளம் காணும் சக்தி தட்டான் பூச்சிகளுக்கு (DragonFly) உண்டு என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் முடிவு செய்துள்ளனர்.
நாய்கள் போல பூச்சிகளால் கூட நாற்றத்தை சரியாக கண்டறிய முடியும் என அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தட்டான் பூச்சிகள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் சுவாசத்தில் உயிரியக்க குறிப்பான்களைக் கண்டறிந்தது. ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஆச்சரியமான விடயம் தெரிய வந்ததாக அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
சுமார் 20 தட்டான் பூச்சிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் துல்லியமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |