சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுத்த இந்திய உணவகம்: கடும் அபராதம் விதித்த அதிகாரிகள்
பிரித்தானியாவில், சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுத்த இந்திய உணவகம் ஒன்றிற்கு புலம்பெயர்தல் அதிகாரிகள் பெருந்தொகை ஒன்றை அபராதமாக விதித்துள்ளார்கள்.
இந்திய உணவகத்தில் ரெய்டு
நேற்று முன் தினம், இங்கிலாந்தின் பிரிஸ்டலுக்கு அருகிலுள்ள Nailsea என்னுமிடத்தில் அமைந்துள்ள Posh Spice என்னும் இந்திய உணவகத்தில் புலம்பெயர்தல் அதிகாரிகள் ரெய்டு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
(Image: Bristol Live)
புலம்பெயர்தல் அதிகாரிகளைக் கண்டதும் சட்டென தாங்கள் அணிந்திருந்த ஏப்ரன்களை கழற்றிவிட்டு அங்கிருந்து பின்வழியாக வெளியேற முயன்றுள்ளார்கள் சிலர்.
அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின் பக்க வாசலில் சிலரை நிறுத்திவைத்திருக்க, வெளியேற முயன்றவர்கள் அவர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார்கள்.
அவர்களில் இருவர் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளதால், அவர்கள் இருவரும் நாடுகடத்தப்படும் வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
(Image: PAUL GILLIS / Reach PLC)
கடும் அபராதம் விதித்த அதிகாரிகள்
கடந்த 15 மாதங்களில் இந்த உணவகத்தில் ரெய்டு நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். முதல் முறை ரெய்டின்போது, உணவக உரிமையாளருக்கு 40,000 பவுண்டுகளும், இரண்டாவது முறை 60,000 பவுண்டுகளும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(Image: PAUL GILLIS / Reach PLC)
தற்போது அவர் மீண்டும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை பணிக்கு வைத்து சிக்கியுள்ளதால், மீண்டும் அவர் அபராதம் செலுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில், உணவகத்துக்கு சாப்பிட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கியுள்ள நிலையில், 24 மணி நேரத்துக்கு உணவகம் இயங்காது என அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்கள்.
(Image: PAUL GILLIS / Reach PLC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |