மீண்டும் கை கோர்க்கும் ஜாம்பவான்கள் டிராவிட் - லட்சுமண் ஜோடி! கெத்து காட்ட தயாராகும் இந்திய அணி.. ரசிகர்கள் உற்சாகம்
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமணுக்கு செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். அவருடைய ஒப்பந்தம் இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடியும், நிலையில் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ விதிகளின்படி ஒரே வீரர் இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது என்பதால், டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், கங்குலி, ஜெய்ஷா உள்ளிட்ட அனைத்து மூத்த நிர்வாகிகளுக்கும் என்சிஏ தலைவராக லட்சுமணை நியமிக்க வேண்டும் என்பதே விருப்பம்.
பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிட்டுக்கும் லட்சுமணுக்கும் சிறப்பான உறவு உள்ளது. இருப்பினும், இதில் இறுதி முடிவை லட்சுமண் தான் எடுக்க வேண்டும்.
இருப்பினும் என்சிஏ இயக்குநராகத் தனது பெயர் பரிசீலிக்கப்படுவது குறித்து இதுவரை லட்சுமண் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 1990களிலும் 2000களிலும் கிரிக்கெட்டை பார்த்தவர்களுக்கு டிராவிட் - லட்சுமண் பாட்னர்ஷிப்பை கண்டிப்பாக பார்த்திருப்பார்கள்.
அப்போது களத்திலும் இருவரும் ஜோடி சேர்ந்தால், இந்தியாவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிடும். அதேபோல இப்போது களத்திற்கு வெளியே இருவரும் ஜோடி சேர்ந்தால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் உறுதியாகிவிடும் என நம்புகிறது பிசிசிஐ. இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்லது