இலங்கை வீரரை நேரில் சென்று வாழ்த்திய கோலி, டிராவிட்: ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டு!
இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியில் தனது இறுதி ஆட்டத்தை விளையாட இருக்கும் இலங்கை வீரர் சுரங்கா லக்மாலை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் முன்னனி வீரர் விராட் கோலி என இருவரும் சென்று வாழ்த்தியுள்ளனர்.
இந்தியா- இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் விளையாடும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மால் தனது கடைசி போட்டியாக இதை அறிவித்ததை தொடர்ந்து அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் முன்னனி வீரர் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்
.Head Coach Rahul Dravid and former #TeamIndia Captain @imVkohli congratulate Suranga Lakmal as he is all set to bid adieu to international cricket.@Paytm #INDvSL pic.twitter.com/Vroo0mlQLB
— BCCI (@BCCI) March 13, 2022
மேலும் இலங்கை வீரர் சுரங்கா லக்மாலிற்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பதற்காக இலங்கை வீரர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி சென்றுள்ளனர்.
இதுதொடர்பான விடியோவை பிசிசிஐ ட்விட்டரில் வெளியீட்டு, “சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெற தயாராகி வரும் சுரங்கா லக்மாலுக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் வாழ்த்துகள்” என தெரிவித்து பதிவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் முன்னனி வீரர் விராட் கோலியின் செய்கைகளுக்கு ரசிகர்கள் பாராட்டு குவிந்து வருகிறது.