டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக்க கூடாது! ஏன்? முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சொல்லும் காரணம்
இந்தியாவின் சர்வதேச அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளர் ஆக்குவதற்கு நிர்பந்திக்க கூடாது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
இந்திய அணி, இப்போது ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களில் விளையாடவுள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான முதல் போட்டி வரும் ஆக்ஸ்ட் மாதம் 4-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு விளையாட சென்ற அந்தணி அப்படியே இங்கிலாந்திலே பயிற்சி எடுத்து வருகிறது.
இதற்கிடையில், இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையேயான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெறவுள்ளது, இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 13-ஆம் திகதி துவங்கவுள்ளது.
இந்த அணிக்கு ஷிகர்தவான் கேப்டனாகவும், ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இள்ம வீரர்கள் கொண்ட இந்த பட்டாளம் எப்படி ஆடப்போகிறது என்று ஆவல் நிலவி வருகிறது.
மறும்புறம் இந்தியாவின் பி அணியை இலங்கைக்கு அனுப்பிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி டிராவிட் தற்போது இந்த அணிக்கு பயிற்சியாளராக உள்ளதால்,இவரை தேசிய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பின் எழுந்து வருகிறது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறுகையில், ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இலங்கைக்கு சென்றுள்ளார். இளம் வீரர்களுக்கு இது மிக நன்மையளிக்கும். ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து நீடித்து, அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியில் தொடர்ச்சியாக பல திறமையான இளம் வீரர்களை உருவாக்கி கொடுக்க வேண்டும்.
அதனால் அவரை இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக்க நிர்பந்திக்கக்கூடாது. சர்வதேச அளவில் ஆடும் வீரர்கள் முழுமையாக தயாராகிவிட்ட வீரர்கள். எனவே இளம் வீரர்களை உருவாக்கும் பணியில் டிராவிட் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.