இலங்கை தொடரில் டிராவிட் சொதப்பினால்? இந்த மூன்று பேரில் யாராவது ஒருவர் அடுத்த பயிற்சியாளர் ஆகலாம் என தகவல்
இலங்கை அணிக்கு எதிரான தொடரில், பயிற்சியாளர்கள் என்ற முறையில் சொதப்பினால், அடுத்து வரவுள்ள பயிற்சியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்திய அணி ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்காக இங்கிலாந்து சென்றதால், இந்த இலங்கை தொடரில், இந்திய அணியின் இளம் வீரர்கள் விளையாடவுள்ளனர்.
இந்த தொடருக்கு, இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அடுத்த இந்திய அணிக்கு பயிற்சியாளர், டி20 உலகக் கோப்பை முடிந்த பின்பு அதைப் பற்றிய அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.
அப்படி இந்த இலங்கை அணி தொடரில், டிராவிட் தலைமையிலான அணி சொதப்பினால், அவருக்கு பதில் இந்திய அணிக்காக தேர்வாக இருக்கும் மூன்று பயிற்சியாளர்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
டிரேவர் பாய்லிஸ்
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட, இவர் இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெற்றி பெறுவதற்கு உதவினார்.
டாம் மூடி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கின்ற டாம் மூடி பல அணிக்கு தலைமையேற்று மிகச் சிறந்த பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.
மஹேல ஜெயவர்தனே
கடந்த 2015-ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்று இங்கிலாந்து அணி வெற்றிக்கு முக்கிய நபராக இருந்திருக்கிறார்.
மேலும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்ந்து வருகிறார். இவரது பயிற்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை டைட்டில் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.