சூர்ய குமார் யாதவ்-வின் மோசமான ஃபார்ம்: இந்திய பயிற்சியாளர் டிராவிட் ஓபன் டாக்
சூர்யகுமார் யாதவ் சிறந்த வீரர் என்பதால் அவருக்கு நிறைய வாய்ப்புகள் நாங்கள் வழங்குவோம் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
மோசமான ஃபார்மில் சூர்யகுமார் யாதவ்
ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய தனித்துவமான பேட்டிங் திறமையால் அனைவரையும் கட்டிப்போட்ட சூர்ய குமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தன்னுடைய தனித்துவமான பேட்டிங் திறமையை வெளிக்காட்ட தவறி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பெரிய ஓட்டங்கள் எதுவும் குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சரிசமான நிலையில் உள்ளனர்.
நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் சூர்ய குமார் யாதவ் 19 ஓட்டங்களையும், 24 ஓட்டங்களையும் மட்டுமே குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிராவிட் கருத்து
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் சூர்ய குமார் யாதவ்-ன் மோசமான பார்ம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், சூர்ய குமார் யாதவ் மிகச் சிறந்த வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் டி20 போட்டிகள் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே அதிகமாக விளையாடியுள்ளார், அதில் வெளிப்படுத்திய சிறப்பான விளையாட்டை சர்வதேச போட்டிகளில் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பதை அவரே முதல் ஆளாக ஒப்புக் கொள்வார்.
BCCI
ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாட அளவுக்கு ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதற்கு காரணம் ஐபிஎல்-லில் ஒருநாள் போட்டிகள் இல்லை என்பதே, அது உங்களுக்கும் தெரியும்.
இருப்பினும் அவர் ஒருநாள் போட்டிகளுக்காக கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு வருகிறார் என நம்புகிறேன், அத்துடன் மிடில் ஓவரில் எவ்வாறு விளையாடுவது என்று புரிந்து கொண்டு வருகிறார்.
சூர்ய குமார் யாதவ்-விடம் நிறைய திறமைகள் உள்ளது எனவே அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் கொடுப்போம் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |