இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் நியமனம்
இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ராகுல் டிராவிட் பயிற்சியளிப்பார் என பிசிசிஐ செயலாளர் ஜே ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜூன் 28ம் திகதி இலங்கைக்கு புறப்படும் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணித்தலைவராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 13,16 மற்றும் 18ம் திகதிகளில் 3 ஒரு நாள் போட்டி தொடரும், ஜூலை 21, 23 மற்றும் 25ம் திகதிகளில் டி-20 போட்டி தொடரும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.