விஞ்ஞானி வேலையை விட்டு மோமோஸ் விற்க வந்தவருக்கு.., இன்று கோடிக்கணக்கில் வருமானம்
தான் பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி வேலையை விட்டு தனக்கு பிடித்த உணவான மோமோசை விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
யார் அவர்?
இந்திய மாநிலமான அஸ்ஸாமின் சில்சாரில் பிறந்து வளர்ந்தவர் ஷௌவிக் தார் (Shouvik). இவர், நேஷனல் இன்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். டிஆர்டிஓ நிறுவனத்தில் (DRDO scientist) சயின்டிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு மோமோஸ் என்றால் கொள்ளை பிரியம். ஆனால், ஹைதராபாத் கடைகளில் கிடைக்காததால் சுயமாக மோமோஸ் செய்ய முடிவு செய்தார்.
பின்னர், தான் பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி வேலையை விட்டு பிரபாதி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடேட் (Prabhati Foods Private Limited) என்ற பெயரில் ‘Zomoz’ என்ற பிராண்டில் ஹைதராபாத்தில் மோமோஸ் விற்பனை செய்து வந்தார்.
இவர், 2016 இல் முதல் விற்பனை நிலையத்தைத் திறந்தார். பின்னர் வாடிக்கையாளர்களும் அதிகமாக வர தொடங்கினர். அதன் பின்னர் அதிகமான கடைகளை திறந்தார்.
ஒரு வருடம் கழித்து ஹைதராபாத், கேரளா மற்றும் விஜயவாடாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மோமோஸ்களை வழங்குவதற்காக இவரிடம் அணுகினர். இதையடுத்து, அங்குள்ள தியேட்டர்களில் மோமோஸை விற்பனை செய்து வருகிறார்.
Automated Momo-Making Machine
இதையடுத்து, அதிகமான மோமோஸ்களை தயாரிக்க புதிய இயந்திரத்தை உருவாக்க ஷௌவிக் திட்டமிட்டார். இதற்காக சீனா, கொரியா போன்ற நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்த பின்னர் அதற்கான இயந்திரத்தை வடிவமைத்தார்.
இந்த இயந்திரமானது காய்கறி வெட்டுவது முதல் மாவு பிசைவது வரை அனைத்து வேலைகளையும் செய்தது. பின்னர், அதிக மெஷின்களை தயாரித்து தனது மோமோஸ் புரோடக்ஷன் சென்டரில் நிறுவினார்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் மோமோஸ்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது, ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |