தினமும் 4 கப் டீ குடிச்சா சர்க்கரை நோய் வராதா ? ஆய்வில் வெளிவந்த தகவல்
மோசமான வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம் அல்லது மரபுவழி சார்ந்து சர்க்கரை நோய் ஒருவரை தாக்குகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
சர்க்கரை நோய் இருந்தாலே போதும், பலரும் அதை சாப்பிடுங்க, இதை சாப்பிடுங்க என அறிவுரைகளை வழங்குவார்கள்.
ஆனால், மருத்துவமும் ஆராய்ச்சியும் என்ன சொல்கிறது என்பதே நமக்கு முக்கியம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிகமாக டீ அருந்தினால் சர்க்கரை நோய் அபாயத்தை குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு என்ன சொல்கின்றது?
நம்மில் பலருக்கும் ஒரு டீ இல்லாமல் நாளே துவங்காது. ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகமாக
பிளாக் டீ , க்ரீன் டீ போன்றவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சமீபத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் லட்சக்கணக்கான மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நாளில் ஒன்றிலிருந்து மூன்று கப் டீ அருந்தும் நபர்களுக்கு டைப் 2 சர்க்கரை அபாயம் 4 சதவீதம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 4 கப்புக்கு மேல் டீ அருந்துபவர்களுக்கு 17 சதவீதம் டைப் 2 அபாயம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நிபுணர்களின் கருத்துப்படி, இதற்கு காரணம் பாலிபீனால்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்டுகள் தானாம். மேலும் க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கூறுகள் இன்சுலின் குறைபாட்டை சரி செய்வதற்கு உதவுகிறதாம். ஆனால், சர்க்கரையை பொறுத்த வரைக்கும் இந்த முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும்.
குறிப்பு
நீங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் நாலு கப் க்ரீன் டீ குடிப்பதில் பிரச்சனை இல்லை. நாலு கப் டீக்கும் ஏழு ஸ்பூன் சர்க்கரையை அள்ளி போட்டுக் கொள்வது, பிற டயட் ஏதும் பின்பற்றாமல் இருப்பது எந்த வித நல்ல முடிவையும் தராது.