வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருகம்புல் சாறு குடிங்க! இந்த நன்மைகள் கிடைக்குமாம்
புல், பூண்டுகளிலும் பல மருத்துவ குணங்கள் என்பதற்கு மிகப்பெரிய அடையாளம் அருகம்புல்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து நீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின், நீரை சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.
இதனை ஒரு சில பொருட்களுடன் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பது இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்டுக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதை மிக்சியில் போட்டு சிரிது சிறிதாக நீர் விட்டு குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு இதனை நன்கு வடிகட்டி இனிப்பு தேவையான அளவு அல்லது தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்.
பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
image - timesofindia
நன்மைகள்
- அருகம்புல் சாற்றில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது.
- இரத்தத்தில் உள்ள அதிகபடியான அமிலத்தன்மையை நீக்கி காரத்தன்மையை உருவாக்குகிறது.
- அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது.
- தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது.
- சிறுநீரக பாதை அழற்சியை தடுக்கிறது.
- இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.