ஓமம் கலந்த தண்ணீர்! தினமும் இப்படி குடிச்சு பாருங்க.. இந்த நோய்கள் பறந்து ஓடிவிடுமாம்
Weight loss
Constipation
Indigestion
By Kishanthini
பொதுவாக நமது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஓமத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அதோடு ஓமத்தில் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது.
செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம்.
அதுமட்டுமின்றி இதனை தண்ணீரில் கலந்து குடிப்பதனால் கூட பல நன்மைகள் உண்டாகுகின்றது.
தற்போது ஓமம் கலந்த தண்ணீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஓமம் விதைகள் தீர்வு அளிக்கும்.
- சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் தீரும்.
- ஓமம், மிளகு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
- ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.
- சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். மேலும் இந்த ஓமம் தண்ணீரை தொடர்ந்து குடித்து வர உடல் எடையும் குறையும்.
- மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
- பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US