இந்த ஜூஸை காலையில் ஒரு டம்ளர் குடித்து பாருங்க! கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்
கசப்பு தன்மை கொண்ட பாகற்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற ஏராளமான சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
தினமும் காலையில் பாகற்காயை ஜூஸ் செய்து ஒரு டம்ளர் குடித்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும்.
3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் ஏற்படாது.
பாகற்காய் அல்லது அதன் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கச் செய்யும்.
பாகற்காயை ஜூஸ் செய்து மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, ரத்தத்தில் மற்றும் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
தினமும் சரியான முறையில் உணவுகளை சாப்பிடாவிட்டால் பலவிதமான நோய்கள் தொற்றிக் கொள்ளும். எனவே இதற்கு சீரான முறையில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்புகள் மற்றும் பசியை அதிகரிக்கச் செய்கிறது.
பாகற்காய் ஜூஸ், கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பாகற்காயில் இருக்கும் புற்றுநோய் எதிர்ப்பி, கணைய புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியை தடுக்கச் செய்கிறது.