வாழ்க்கையின் 12 நிமிடங்கள்... குளிர்பானங்கள் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுக்கும் ஆய்வறிக்கை
ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு கோக்கை ருசிக்கும் போது, உங்கள் வாழ்வின் 12 நிமிடங்களை நீங்கள் இழக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அளவாக சாப்பிடாவிட்டால்
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலேயே கவலையளிக்கும் புள்ளி விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு நேரத்தைப் பறிக்கும் என்பதை மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தியது.
மட்டுமின்றி, அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகள் அளவாக சாப்பிடாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும். மேலும் சில பிடித்த உணவு வகைகள் உங்கள் வாழ்க்கையின் சில நிமிடங்களை அழித்துவிடுகின்றன.
ஒரு ஹாட் டாக் சாப்பிடுவதால் 36 நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்து பறிக்கப்படுகிறது. அதனுடன் கோக் என்றால், மேலும் 12 நிமிடங்களை இழக்க நேரிடும்.
காலை உணவு சாண்ட்விச்கள் மற்றும் முட்டைகள் ஒருவரின் வாழ்க்கையிலிருந்து 13 நிமிடங்களை எடுத்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. சீஸ் பர்கர்கள் ஒன்பது நிமிடங்களைப் பறித்துக் கொள்கின்றன.
இந்த ஆய்வு முழுக்க கெட்ட செய்தி அல்ல, சில வகையான மீன்களை சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் மேலும் 28 நிமிடங்களைத் தரும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஒருவரின் ஆயுளை
மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவுமுறை மாற்றங்களின் அவசரம் இந்த ஆய்வில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது என்றே ஆய்வை முன்னெடுத்த Dr Olivier Jolliet தெரிவித்துள்ளார்.
பீட்சா, மக்ரோனி, சீஸ், ஹாட் டாக்ஸ் மற்றும் கோக் போன்ற சில மிக விருப்பமான உணவுகள் ஒருவரின் ஆயுளைக் குறைக்கின்றன என்பது விஞ்ஞானிகளால் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செடார் மற்றும் brie போன்ற பாலாடைக்கட்டிகளை சாப்பிடுவது ஆயுட்காலம் அதிகரிக்கவும் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும் என்று முன்னர் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |