வெயில் காலத்தில் உடலை குளு குளுவென வைத்து கொள்ள வேண்டுமா? பச்சை மாங்காய் சாறோடு சீரகத்தை சேர்த்து குடிச்சு பாருங்க.
வெயில் காலத்தில் உடம்பை குளிர்ச்சியாக வைத்து கொள்வது மிகவும் அவசியமானது ஆகும். இதற்கு பல இயற்கை பானங்கள் பெரிதும் உதவுகின்றது.
அதில் பச்சை மாங்காயுடன் சீரகம் சேர்த்து தயாரிக்கப்படும் பானம் வெயிலுக்கு மிகவும் உகந்த ஒன்று. இது டலைக் குளிர்ச்சியாக்கி வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும்.
அதை எப்படி செய்வது, அதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்
- பச்சை மாங்காய் - 1
- சீரகத் தூள் - 1 ஸ்பூன்
- புதினா - ஒரு கைப்பிடி
- பச்சை மிளகாய் - 1 சிறியது
- உப்பு - சிறிது
செய்யும் முறை
பச்சை மாங்காயை பொடிப் பொடியாக நறுக்கி, அதனுடன் உப்பு, மிளகாய், புதினா சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து அதனுடன் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரையிலும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதை வடிகட்டி, அதனுடன் சீரகத் தூள் சேர்த்தால் பானம் ரெடி. கூடுதல் சுவை தேவைப்பட்டால் சிலர் சாட் மசாலா சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
நன்மைகள்
- உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இது இரைப்பைக் குடல் கோளாறுகளை சமாளிக்க உதவுகிறது. இது வயிற்று போக்கை தடுக்கவும் உதவுகிறது.
- நீரிழிவு நோய் மற்றும் ரத்தத்தில் உயர் சர்க்கரை அளவை எதிர்த்து போராட உதவுகிறது. இரத்தத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
- குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது அதனால் இது நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பருவ கால நோய்களில் இருந்து காக்கிறது.
- இது வயிற்றுப்போக்கு, மூலநோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல்வேறு குடல் பிரச்சினைகளுக்கு இயற்கையாகவே சிகிச்சை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.