குடிபோதையில் செய்த தவறு: சிறை செல்லும் சுவிஸ் நாட்டவர்
சுவிட்சர்லாந்தில், குடிபோதையில் கார் ஓட்டிய ஒருவர் விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு மாணவர் உயிரிழந்ததால், குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு, கொலைக்குற்றச்சாட்டாக மாறியுள்ளது.
குடிபோதையில் செய்த தவறு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், 44 வயது நபர் ஒருவர் குடிபோதையில் அதிவேகத்தில் கார் ஓட்டிச் சென்றுள்ளார்.
அவர் கார் ஓட்டிய வேகத்தைக் கண்ட மற்றொரு காரின் சாரதி பொலிசாரை அழைத்து தகவல் கொடுத்துள்ளார்.
ஆனால், அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது.
ஆம், குடிபோதையில் கார் ஓட்டிய அந்த நபர், அலெக்சாண்டர் (24) என்னும் மாணவரின் சைக்கிள் மீது காரை மோதியதில், அந்த மாணவர் உயிரிழந்துவிட்டார்.
ஆகவே, விபத்தை ஏற்படுத்தி உயிர் பலி வாங்கிய அந்த சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |