ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்! கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்
காலை நேரத்தில் தினமும் வெறும் வயிற்றில் கேரட்டை நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஜூஸ் போல செய்து 30 மி.லி அளவு குடித்து வர வேண்டும்.
இப்படி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
காலை உணவிற்கு முன்பு தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், நமது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, ஆர்த்ரிடிஸ், மோசமான செரிமானம், வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் மற்றும் மூலநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
கேரட் ஜூஸை குடிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமான நம்முடைய வேலைச்சுமைகள் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் மனச்சோர்வினை நீக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
கேரட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்தால், சோர்ந்துள்ள இதய தசைகள் வலுவடைந்து, உடல் பருமன் ஏற்படாமல் எப்போதும் உடல் எடையை சீராக வைக்கிறது.
நமது வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தை தடுப்பதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸை குடிக்க வேண்டும்.
கேரட்டில் உள்ள விட்டமின் A சத்தானது, கல்லீரல், இரைப்பை, குடல், கண் பார்வை, இதயம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.