தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிப்பது நல்லதா? அப்படி குடிச்சா என்ன நடக்கும்?
கிரீன் டீ உயர் இரத்த அழுத்தம் முதல் இதய செயலிழப்பு வரை இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறதாக கூறப்படுகிறது.
இதனை தூங்குவதற்கு முன் ஒரு கப் லேசான, நறுமணமுள்ள கிரீன் டீ அருந்துவது நரம்புகளைத் தளர்த்தவும் தூக்கத்தை தூண்டவும் உதவுகிறது.
ஆனால் தூங்குவதற்கு முன் தினமும் கிரீன் டீ குடிப்பது பாதுகாப்பானதா, அது உண்மையில் உதவுமா? என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாமா?
- கிரீன் டீயில் உள்ள காஃபின் சிறிதளவு தூக்கத்தை பாதிக்கும் மற்றும் மூளையின் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
- தூங்குவதற்கு முன் அதிக திரவத்தை குடிப்பதால் அசெளகரியம் மற்றும் கழிவறைக்கு அடிக்கடி செல்லும் தொந்தரவு அதிகரிக்கும்.
- எனவே, அதை மிதமாக உட்கொள்வது மற்றும் படுக்கைக்கு முன் கிரீன் டீ குடிக்கும் அளவைக் குறைப்பது அல்லது படுக்கைக்கு 2-3 மணி நேரத்திற்கு முன் குடிப்பது அவசியம்.
எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும்?
2-3 கப் கிரீன் டீ குடித்தால் போதுமான பலன் கிடைக்கும். ஆனால் அதை அதிகமாக குடிப்பது குமட்டல், தூக்கமின்மை மற்றும் இரத்த சோகை போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எனவே, தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கிரீன் டீ குடிப்பது, உங்கள் மன அழுத்தத்தை போக்கி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.