ஈஸியா உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் இந்த ஜூஸ்களை குடியுங்கள்
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருப்பாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடையை குறைப்பதற்கு பெரும்பாலும் மாத்திரை மருந்துகளை உண்டு உடல் எடையை குறைக்க நினைக்கிறார்கள்.
ஆனால் மாத்திரை மருந்துகளை தவிர்த்து இயற்கை முறையில் சில பழச்சாறுகளை குடிப்பதன் மூலம் உடல் எடை குறைக்கலாம்.

உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் ஒருசில ஜூஸ்கள் என்னவென்று பார்ப்போம்.
கேரட் ஜூஸ்
கேரட்டில் உள்ள அதிகளவு நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிறைவான உணர்வை தருவதால் உடல் எடை குறைய அதிகம் வாய்ப்புள்ளது.
மேலும் கேரட் ஜூஸ் பித்த நீர் உற்பத்திக்கு உதவி புரிந்து, கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
Getty Images
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து, எடை இழப்பிற்கு உதவி புரிகின்றன.
உடல் எடையைக் குறைக்க ஆரஞ்சு ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடித்து வந்தால், உடல் எடைவிரைவில் குறையும்.

பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான குடலியக்கத்தை தூண்டி, எடை இழப்புக்கு உதவி புரியும்.
மேலும் பீட்ரூட் ஜூஸ் உடன் சிறிது எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

தர்பூசணி ஜூஸ்
தர்பூசணியை உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் குடித்து வந்தால், உடற்பயிற்சியால் உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் உடலுக்கு மீண்டும் கிடைத்து, உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.
மேலும் அதில் உள்ள அமினோ அமிலத்தால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையும் குறையும்.
canva
நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காய் ஜூஸை காலை உணவிற்கு பின் குடித்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி, கொழுப்புக்களை வேகமாக குறையும் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ளும்.
நெல்லிக்காய் ஜூஸ் உடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
Shutterstock
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |