உடல் எடை வேகமாக குறைய காபியை இப்படி போட்டு குடிங்க
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடையை குறைக்க எப்படி அனைவரும் வாக்கிங், ஜாக்கிங், யோகா போன்றவற்றை செய்யலாமோ அப்படித்தான் இந்த காபி குடிப்பது.
உடல் எடை வேகமாக குறைக்க காபியை எப்படி போட்டு குடிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தயாரிக்கும் முறை
- முதலில் ஒரு கப்பில் பாதி எலுமிச்சையை பிழிந்து சாறை எடுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் 1 ஸ்பூன் காபி பொடி மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
உடல் எடை குறைய காபி
சூடான நீருடன் காபி பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் எடை வேகமாக குறையும். இதை காலை, மாலை அல்லது இடைப்பட்ட காலை நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.
காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்போ அல்லது சாப்பிட்ட பின்போ இந்த காபியை எடுத்துக் கொள்ளலாம்.
freepik
குறிப்பாக இதை தூங்குவதற்கு முன் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்களுடைய தூக்கத்தை பாதிக்கலாம்.
இந்த முறையில் காபி போட்டு குடித்தால் உடல் எடையை ஈசியாக குறைக்கலாம்.
மேலும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் A, C மற்றும் கால்சியம் சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
Getty | Adul Promnok / EyeEm
காபி பொடி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த மற்றும் பசி உணர்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்வதை தடுக்கிறது.
காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடலின் ஆற்றல் மட்டத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும் எலுமிச்சை காபி கலோரிகளை எரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |