மிக விரைவில் உடல் எடை குறைத்து, நோய் எதிர்ப்பு பெற இந்த டீயை தவறாமல் குடியுங்கள்!
இஞ்சி பழங்காலத்தில் இருந்தே உணவு மற்றும் மருந்துக்காக மிக அதிக அளவில் மக்களால் உபயோகபடுத்தபடுகிறது. பழங்காலத்தில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறையில் 50% மருந்துகள் இஞ்சியையே மூலப்பொருளாக கொண்டிருந்ததாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழைய மருத்துவ குறிப்புகளைப் பார்த்தால், இஞ்சி பச்சையாகவும், காயவைத்தும் மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு மருத்துவ குறிப்புகளின்படி இஞ்சி வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்துள்ளது.
இஞ்சி 5 ஆயிரம் வருடங்களாக சமையலில் மசாலாப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கீழ்க்கண்ட நோய்களை குணபடுத்துவதிலும் இயற்கை மருந்தாக இஞ்சி உள்ளது.
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம்,கவலை ஏற்படும்போது நச்ச ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவலை ஏற்படும்போது இஞ்சி டீ குடிக்க சொல்கிறார்கள்.
மலச்சிக்கல்,அழற்சி,சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகளை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு ரத்த சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது. எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும்.
உடல் எடை குறைய
இஞ்சி டீ வயிற்றில் சுரக்கும் பித்த நீர் அளவை அதிகரிக்க உதவும். பித்த நீர் என்பது கொழுப்பை கரைக்கவல்ல திரவம். அதனால் நம் உடல் எடைகுறைய உதவும்.
சளி பிரச்சினைக்கு
தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
மாதவிடாய் பிரச்சனைக்கு
சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும் நன்மை தரும்.
நோய் எதிர்ப்பு சக்தி
அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும்.
உடல் வலி
உடல் வலிக்கும் இஞ்சி டீயில் மருந்து இருக்கிறது. சரியான விகிதத்தில் இஞ்சி சேர்த்து டீயை பருகும் பட்சத்தில் உங்களுக்கு ஏற்பட்ட உடல் வலி இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடும்.