அளவிற்கு அதிகம் டீ குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்போ சருமத்திற்கு இந்த பாதிப்புகள் வரும்
குளிர்காலத்தில் சூடான பானங்களை அருந்தவே அனைவரும் விரும்புவார்கள், அதிலும் தேநீரின் சுவை பலரையும் அடிமையாக்கியுள்ளது.
ஆனால் அளவிற்கு அதிகமாக டீ குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
குறிப்பாக சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
Adobe stock
சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள்
டீயை அதிகமாக குடிப்பதால் தூக்கமின்மை இருக்காது. இதனால் எப்போதும் சோம்பலான உணர்வை ஏற்படுத்தும்.
அளவுக்கு அதிகமாக டீயை அருந்தும் போது சிறுநீர் அடிக்கடி வெளியேறி உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் தோல் வறண்டு விடுவதோடு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
அதிகமாக டீ அருந்தும் போது, உடலில் ஹார்மோன் சமநிலையைப் பாதித்து சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் சரும துளைகளை அடைத்து முகப்பருக்கள் உண்டாகின்றன.
டீயில் உள்ள காஃபின் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் கொலாஜன் செயலிழப்பை உண்டாக்குகிறது. இதனால் சுருக்கம் ஏற்பட்டு இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதிகமாக குடிக்கும் பொழுது தூக்கமின்மை ஏற்படுவதால் கண்களுக்கு கீழே கருவளையங்களை ஏற்படுத்தும்.
இஞ்சி, ஏலக்காய் போன்ற நறுமணம் பொருட்களை சேர்த்து டீ அருந்துவதால் உடலின் ஒவ்வாமை காரணமாக அழற்சி ஏற்படுவதோடு சருமம் சிவந்தும் போய்விடும்.
அளவிற்கு அதிகம் சூடான டீயை உட்கொள்ளும் போது, தோல் நோயான ரோசாசியா பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கு மற்றும் கன்னம் சிவப்பாக மாறக்கூடும்.
அளவுக்கு அதிகமாக டீ அருந்துவதால் சில நேரங்களில் தோல் புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படும் என்கிறது ஆய்வுகள்.
அதிகமாக குடிக்காமல் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் அருந்துவது உங்களது உடல் நலத்திற்கு சிறந்ததாக அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |