புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் வெள்ளரி குடிநீர்! இப்படி எடுத்து கொண்டாலே போதுமாம்
வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும்.
இது எளிதாக கிடைக்கும் காய்கறியும் கூட. வெள்ளரிக்காய் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அதுமட்டுமின்றி இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும்.
இந்த வெள்ளரிக்காய் பானம் பிற சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக அற்புதமாக இருக்கும். இதை தயாரிப்பதும் எளிதாகவே இருக்கும். தற்போது அவை எப்படி தயாரிக்கலாம். என்ன நன்மைகளை வழங்கும் என்று பார்ப்போம்.
தேவையானவை
- நடுத்தர அளவிலான வெள்ளரி - 1
- தண்ணீர் - 2 லிட்டர்
- புதினா, சிட்ரஸ் , ஸ்ட்ராபெர்ரி அல்லது நீங்கள் விரும்பும் பழம்.
செய்முறை
- வெள்ளரிக்காய் தோலுரித்து ஒரு கரண்டியால் விதைகளை அகற்றவும். தேவையெனில் விதைகளை அகற்றலாம். வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி மற்ற பொருள்களையும் தண்ணீரில் சேர்க்கவும்.
- இவை மிதக்கும் இது தண்ணீரில் ஊடுருவக்கூடியது. இதன் சுவையை அனுபவிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு வைத்து குடிப்பதற்கு முன்பு மெதுவாக நீரை கலக்கி விடவும். 6 மணி நேரம் கழித்து வெள்ளரியை வெளியேற்றிவிடவும்.
- தண்ணீர் சுவைக்கேற்ப அதை கூடுதலாகவோ குறைவாகவோ சேர்க்கலாம். இந்த நீர் அதிகபட்சம் 1 நாள் வரை வைத்திருந்து குடிக்கலாம். இதில் உங்களுக்கு பிடித்த பழச்சாறுகளையும் சேர்க்கலாம்.
- தினசரி அளவில் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை வெள்ளரி தண்ணீரை உட்கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு
உணர்திறன் நபர்களுக்கு வெள்ளரிக்காயில் இருக்கும் குக்குர்பிடாசின்கள் போன்ற உயிர்வேதியியல் பொருள்கள் நச்சுத்தன்மை உண்டாகலாம்.
சிலருக்கு படை நோய், வீக்கம் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
வீக்கம் அஜீரணம் உணர்திறன் வாய்ந்த செரிமான அமைப்பு கொண்டவர்களுக்கு இந்த வெள்ளரி நீருக்கு பிறகு வயிறு வீக்கம், வயிறு வலி அல்லது வாய்வு போன்றவை உண்டாகலாம். வெகு அரிதாக கடுமையான வயிற்றுப்போக்கையும் உண்டாக்கலாம்.
வேறு நன்மைகள்
- எடை இழப்புக்கு உதவும்
- புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.
- உயர் இரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும்.
- தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்