உணவில் ரசம் சேர்த்து கொள்வதால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
ரசம்! வடை பாயாசத்துடன் கொடுக்கப்படும் ஒவ்வொரு விருந்திலும் அவசியம் இருக்கும். சரி, மதிய வேளையில் உண்ணும் உணவில் ரசம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
ஆம், சாப்பிடும் போது சிறிது ரசம் சேர்த்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.
ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை.
அற்புதமான மற்றொரு நன்மை என்னவெனில், ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
ரசத்தை அன்றாடம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
கர்ப்பிணிகள் கூட ரசத்தை உட்கொள்ளலாம். ஏனெனில் அதில் புரோட்டீன், வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
ரசத்தில் கனிமச்சத்துக்களான மக்னீசியம், காப்பர், செலினியம், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஆகவே அன்றாடம் இதனை சிறிது உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஒருசில குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.