காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா?
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடையை குறைப்பதற்கு பெரும்பாலும் மாத்திரை மருந்துகளை உண்டு உடல் எடையை குறைக்க நினைக்கிறார்கள்.
ஆனால் எளிமையான முறையில் காலையில் சுடு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்றும் கூறப்படுகிறது.
உடல் எடை குறைய சுடு தண்ணீர்
உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், தினமும் காலையில் சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க, உடலில் நீர்சத்தினை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். தண்ணீர் இயற்கையாகவே உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறது.
மேலும், தண்ணீர் நமது உடலில் உள்ள சக்திகளை பாதுகாக்கவும் தேவையில்லாத கிருமிகளை அழிக்கவும் உதவுகிறது.
Shutterstock
உடலில், உள்ள தேவையில்லாத கழிவு பொருட்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றுவதில் சுடு தண்ணீர் உதவுகிறது.
சுடு தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதனால், உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகள் கரையும்.
சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதனால் உடல் எடை குறையலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |