இரவு தூங்குவதற்கு முன்னர் பால் குடிப்பது ஆபத்தை விளைவிக்குமா?
இரவில் தூங்கும் முன்னர் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் பலரிடமும் உண்டு.
இது நல்ல பழக்கமா..?
பால் கால்சியம் , சோடியம் , புரோட்டீன் வைட்டமின் A, K மற்றும் B12, கொழுப்பு, அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. என்பதால் ஆயுர்வேத குறிப்புகளின்படி இரவு பால் குடிப்பது நல்லது என்கின்றனர்.
வெறும் பாலாக அல்லாமல் அதில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் இரவு தூக்கம் நிம்மதியாக இருக்கும் என்கிறது. அதேசமயம் பாலில் உள்ள அமினோ ஆசிட் இரவு குறட்டை விடும் பழக்கத்தை குறைக்க உதவும் என்கிறது. அதேபோல் அது நார்ச்சத்து கொண்டது என்பதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் நல்லது என்கிறது ஆயுர்வேதம்.
ஆனால் மருத்துவர்களோ இரவு பால் குடிப்பது நல்லதல்ல என்கின்றனர். ஏனெனில் பாலில் உள்ள லாக்டோஸ் சற்று சர்க்கரை நிறைந்தது. எனவே இரவு படுக்கைக்கு முன் குடிப்பது நல்லதல்ல. அதோடு நுரையீரல் இரவு நேரத்தில்தான் நச்சு நீக்கி வேலைகளை செய்யும்.
அந்த சமயத்தில் ஹெவியான பால் அருந்துவிட்டு படுக்கும்போது அதன் வேலையை மடைமாற்றம் செய்வதாக இருக்கும். பின் அது நச்சு நீக்கம் செய்யாமல் அருந்திய பாலை செரிமாணிக்க வைத்து அதன் ஊட்டச்சத்துகளை பிரித்து அனுப்பும் வேலைகளில் இறங்கிவிடும்.
எனவே பகலில் உங்கள் உடலும் ஆற்றலில் இருக்கும். பால் குடிப்பதும் உடனே செரிமாணம் அடைந்துவிடும். எனவே பகலில் பால் குடிப்பதே நல்லது என்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் பால் குடிப்பதால் உங்களுக்குள் என்ன மாதிரியான மாற்றங்கள் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும்.