மீன் சாப்பிடுவதால் ஏற்படும் பயங்கர பிரச்சினை: ஆய்வில் தெரியவந்துள்ள பகீர் தகவல்...
ஆறுகள், குளங்கள், ஏரிகள் முதலான நன்னீர் நீர் நிலைகளில் பிடிக்கப்படும் மீன்களால் உருவாகும் ஒரு பிரச்சினை குறித்த ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஆய்வு
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆறுகள், குளங்கள், ஏரிகள் முதலான நன்னீர் நிலைகளில் பிடிக்கப்படும் மீன்களில் மாசுபடுதல் காரணமாக ஒரு பெரிய பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்திலும் அதே நிலைதான் காணப்படுகிறது.
தொழிற்சாலைக் கழிவுகள் முதலான சில பொருட்கள் கலப்பதால், தண்ணீரில் per- and polyfluoroalkyl substances அல்லது PFAS என்று அழைக்கப்படும் ரசாயனங்கள் கலக்கின்றன. இவை மீன், முட்டை முதலான சில உணவுப்பொருட்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் புற்றுநோய், கல்லீரல் பாதிப்புக்கள், குழந்தை பிறப்பதில் பிரச்சினை, ஆஸ்துமா மற்றும் தைராய்டு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிப்பதுடன், அவை நோயெதிர்ப்பு சக்தியையும் பாதிக்கலாம் என்கிறார்கள்.
சுவிட்சர்லாந்திலும் இதே பிரச்சினை
சுவிட்சர்லாந்திலுள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளிலும் இந்த PFAS என்னும் ரசாயனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, Valais மாகாணத்தில் ஐந்து இடங்களில் இந்த பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் தீயணைப்பதற்காக பயன்படுத்தப்படும் தீயணைப்புக் கருவிகளில் இந்த PFAS என்னும் ரசாயனங்கள் காணப்படுவதால், அவற்றைப் பயன்படுத்தும்போது அவை தண்ணீரில் கலந்துவிடுகின்றன.
அந்த தண்ணீரில் வாழும் மீன்களில் அதிக அளவில் இந்த PFAS என்னும் ரசாயனங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த பிரச்சினை உள்ள மாகாணம் Valais மட்டுமல்ல என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.