லண்டனில் புரோட்டீன் பானத்தால் பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்
மேற்கு லண்டனில் தந்தை வாங்கி வந்த புரோட்டீன் பானத்தால் 16 வயது இளைஞர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை பலனின்றி மரணம்
ஈலிங் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 16 வயது ரோஹன் கோதானியா என்பவரே மோசமாக பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்.
Image: Pushpa Godhania
ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் அப்போது தெரியவராத நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கடந்த 2020 ஆகஸ்டு மாதம், தமது மகனின் உடல் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு, ரோஹனின் தந்தை புஷ்பா கோதானியா பல்பொருள் அங்காடி ஒன்றில் இருந்து புரோட்டீன் பானம் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.
குறித்த பானம் பருகிய ரோஹனுக்கு அரிய மரபணு தொடர்பான நோயைத் தூண்டிவிட்டுள்ளது. இதனையடுத்து மூளையில் பாதிப்பு ஏற்பட, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது நாள் ரோஹன் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
புரோட்டீன் பானம் பருகிய அன்று மதியமே அதன் தாக்கம் தமது மகனை செயலிழக்க வைத்துள்ளதாகவும், அடுத்த நாளில் ஆபத்தான கட்டத்திற்கு கொண்டு சென்றதாகவும் புஷ்பா தெரிவித்துள்ளார்.
உடல் நலன் கருதியே புரோட்டீன் பானம்
இதனிடையே ரோஹன் மரணமடைந்ததை அடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பு தானம் பெற்றவர் சுமார் 13 மாதங்களுக்கு பின்னர் திடீரென்று வலிப்பு நோயுடன் மருத்துவமனையை நாடியுள்ளார்.
Image: Pushpa Godhania
இந்த நிலையில், தமது மகனின் உடல் நலன் கருதியே புரோட்டீன் பானம் வாங்கி வந்துள்ளதை புஷ்பா நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புரோட்டீன் பானங்கள் இனி எச்சரிக்கை குறிப்புடன் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மருத்துவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. புஷ்பா கோதானியா குடும்பம் இந்தியாவின் குஜராத் மாகாணத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |