தினமும் 5- 6 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியமா? மருத்துவர் சொல்வது என்ன?
பெரும்பாலான மக்கள் ஒருநாளைக்கு அதிகளவு தண்ணீர் குடித்தால் உடம்பில் உள்ள கழிவுகள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.
கழிவுகளை நீக்குவதற்கு நம் உடலில் நுரையீரல், சிறுநீரகம், தோல் போன்ற உறுப்புகளும், நோய்யெதிர்ப்பு சக்தி செல்களும் உள்ளன.
இந்த உறுப்புகள் அனைத்தும் ஒவ்வொரு வகையான கழிவுகளை வெளியேற்றுகிறது.
இதுதொடர்பாக மருத்துவர் அருண்குமார் அளித்துள்ள விளக்கத்தில், தண்ணீர் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
நம் உடல் 60% தண்ணீரிலே ஆனது. தண்ணீர் ஒரு நாளைக்கு பொதுவாக 2 அல்லது 3 லிட்டர் போதுமானது.
5லிட்டர் குடிப்பேன் 6லிட்டர் குடிப்பேன் என்று குறிக்கோள் எடுத்துலாம் குடிக்க தேவையில்லை, நமக்கு போதும் என்கின்ற அளவிற்கு குடித்தால் போதுமானது.
நச்சு கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று 5 லிட்டர் 6 லிட்டர் என தண்ணீர் குடித்தால் எந்த வித பலன்களும் இல்லை.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
8 லிட்டர் 10 லிட்டர் என அதிகளவு தண்ணீர் குடித்தால் அது இரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவைக்குறைத்து நம் சுயநினைவை இழக்கச் செய்யும்.
எனவே நமக்கு போதும் என்கின்ற அளவுக்கு தண்ணீர் குடித்தால் போதுமானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |