சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பவரா? அப்படி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பலரும் ஒரு வாய் சாப்பிடுவார்கள். உடனே இரண்டு மடக்கு தண்ணீர் குடிப்பார்கள்.
சாப்பிடும்போதுதான் ஊர்க்கதையெல்லாம் பேசுவார்கள். இவை இரண்டுமே தவறு. சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் அருந்தக் கூடாது.
அதேபோல, சாப்பிட்டு அரைமணி நேரம் வரை தண்ணீர் அருந்தக்கூடாது. விக்கல், அடைப்பு போன்று உணவை விழுங்குவதில் சிக்கல் இருந்தால் மட்டும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால், வயிற்றில் உணவைச் செரிக்க உதவும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நீர்த்துப்போய்விடும்.
உமிழ்நீர்ச் சுரப்பையும் பாதிக்கும். சாப்பிடும்போது, `என்ன சாப்பிடுகிறோம்’ என்று உணர்ந்து, நிறம், மணம் ஆகியவற்றை ரசித்து ருசித்துச் சாப்பிடவேண்டும்.
இதை `மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ என்பார்கள். எதையேனும் சிந்தித்துக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.
பிறருடன் பேசிக்கொண்டே சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். வாயை மூடியவாறு மென்று விழுங்கவேண்டும்.