இந்த பகுதி தண்ணீரை குடிக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு சுவிஸ் மாநிலம் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மாசாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் சமையலுக்கோ, குடிக்கவோ அந்த தண்ணீரை பயன்படுத்த மாநில நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பெர்ன் மாநிலத்தின் Emmental மாவட்டத்தில் Hindelbank மற்றும் Krauchthal பகுதிகளில் தண்ணீர் மாசடைந்துள்ளது.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் பலனாக, அப்பகுதி மக்களுக்கு பெடரல் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக Hettiswil, Schleumen மற்றும் Sagi தொழிற்பேட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரையில் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், கழுவுவதற்கும் அந்த தண்ணீர் பயன்படுத்தப்படக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளதால், ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்திருக்கலாம் எனவும், இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் எனவும், தொடர்ந்து வழக்கமாக மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியும் என Krauchthal நகர மேயர் Markus Iseli நம்பிக்கை தெரிவித்துள்ளார்.