தொப்பையை குறைக்கும் சூப்பரான பானங்கள்! தவறாமல் குடித்து வந்தால் விரைவில் பலன் தருமாம்
பொதுவாக இன்றைய கால உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்கை முறை மாற்றங்கள் காரணமாக உடல் எடை அதிகமாகிறது.
இதனால் சிறு வயதிலேயே தொப்பை உருவாகிறது. சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் தொப்பை உருவாகிறது.
இதனை குறைக்க பலர் பல வழிகளில் தேர்ந்தெடுத்து பின்பற்றி வருகிறார்கள்.
அதிலும் உடலில் தேவையற்ற கொழுப்பால் உருவாகும் தொப்பையை கரைப்பதற்கு சிலவகை பானங்கள் கைகொடுக்கும்.
தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொண்டு தொப்பை பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாம்.
- காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து பருகலாம். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். அது வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
- சீரக தண்ணீரும் கொழுப்பை கரைத்து தொப்பையை குறைக்கும் தன்மை கொண்டது. ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை கலந்து இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டிய நீரை பருகலாம்.
- கற்றாழையின் சதைப்பகுதியையும் ஜூஸாக தயாரித்து பருகலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் கைப்பிடி அளவு கற்றாழை சதைப்பகுதியுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து ஜூஸாக்கி பருகலாம். கற்றாழையில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செரிமானத்தை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.
- கிரீன் டீ பருகுவது போல கிரீன் காபியும் பருகலாம். அவைகளில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம் வயிற்று பகுதியில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும். உடல் எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.