மகன் கண்முன்னிலையில் தாயை கொல்ல முயன்ற நபருக்கு அடுத்த 10 நிமிடங்களில் நேர்ந்த கதி! பிரித்தானியாவில் பரபரப்பு சம்பவம்
பிரித்தானியாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது காரை விட்டு ஏற்றி, பிறகு அப்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில், இங்கிலாந்தின் Cumbria கவுன்டியில் Egremont நகரத்தில் Woodend பகுதியில் உள்ள சாலையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஒரு பெண் தனது 15 வயதுக்கு உட்பட்ட மகனுடன் நடந்து சென்றுள்ளார்.
அப்போது வேகமாக வந்த சிகப்பு நிற Kia Rio கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. அவர்கள் அடிபட்டு கீழே விழுந்த நிலையில், காருக்குள் இருந்து இறங்கி வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞன், ஒரு கத்தியை எடுத்து சிறுவனின் கண்முன்னிலையில், அப்பெண்ணை குத்தியுள்ளார்.
பின்னர் உடனடியாக அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றார். சம்பவ நடந்த இடத்துக்கு பொலிஸார் மற்றும் மருத்துவ உதவிகள் வரவழைக்கப்பட்டன.
இந்த சம்பவம் நடந்த சில மணிநேரங்களில், மதியம் 2.44 மணிக்கு St.Bees சாலையில், சிகப்பு நிற கார் ஒன்று தனியாக விபத்துக்கு உள்ளானதாக West Cumbria பொலிஸாருக்கு அழைப்பு வந்தது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கு அந்த 20 வயது இளைஞர் இறந்து கிடந்துள்ளார்.
கும்ப்ரியா காவல்துறையின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இல்லை என தெரிவித்தனர். மேலும் இதனால், பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இந்த சம்பவம் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து மற்றும் கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட பெண் Carlisle-வில் உள்ள கம்பர்லேண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கத்திக்குத்து அப்பெண்ணின் கையில் காயங்களை ஏற்படுத்தியதால், அவை உயிருக்கு ஆபத்தானவை இல்லை என்று விவரிக்கப்பட்டுள்ளன.
சிறுவனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, அவர் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் வெளியேற்றப்பட்டார்.
ஒரு தாயை மகன் கண்முன்னிலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் அடுத்த சில நிமிடங்களில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.