திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் வெளியே குதித்த பேருந்து ஓட்டுநர் பலி! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
தமிழக மாவட்டம் மதுரையில் அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், ஓட்டுநர் வெளியே குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் தங்கபாண்டியன் (43). இவர் மதுரையில் இருந்து உசிலம்பட்டிக்கு பேருந்தை இயக்கி வந்தார்.
இந்த நிலையில் தங்கபாண்டியன் இயக்கிய பேருந்து கொண்டமநாயக்கன்பட்டி அருகே பாலத்தை கடக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த தங்கபாண்டியன், ஓடும் பேருந்தில் இருந்து திடீரென வெளியே குதித்துவிட்டார்.
ஓட்டுநர் பலி
துரதிர்ஷ்டவசமாக அவருக்கு தலையில் பலத்த அடிபட்டதில், தங்கபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
ஆனால், பேருந்து வேலி, மரத்தில் மோதி நின்றதால் யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை.
Dailythanthi
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விபத்து தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |