சாலை என நினைத்து 3D ஓவியம் வரையப்பட்ட சுவற்றில் லாரியை மோதிய ஓட்டுநர்
truck accident after driver mistake 3d painting as real road: டெல்லி - டேராடூன் விரைவு சாலையில், ண்டெய்னர் லாரி ஓட்டுநர் சுவரில் வரையப்பட்டிருந்த 3D சாலை ஓவியத்தை உண்மையான சாலை என நினைத்து அதில் லாரியை மோதியுள்ளார்.
3D ஓவியத்தால் சாலை விபத்து
பொதுவாக நெடுஞ்சாலையில் உள்ள சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் காண்போரின் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டிருக்கும்.

தற்போது அப்படியான ஓவியமே ஒரு சாலை விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
உத்தரகாண்டில் உள்ள டெல்லி - டேராடூன் விரைவு சாலையில், ஒரு கண்டெய்னர் லாரி ஓட்டுநர், சுவரில் வரையப்பட்டிருந்த திறந்தவெளிச் சாலையின் 3D ஓவியத்தை உண்மையான சாலை எனத் தவறாக எண்ணி, முழு வேகத்தில் சென்றுகொண்டிருந்த தனது லாரியை நேராக சுவரில் மோதினார்.
இதில் லாரியின் முன்பகுதி நசுங்கிய நிலையில், ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.
🚨 A truck driver mistakes road painted billboard for a real road and crashed in Delhi. https://t.co/1haEojBFlb
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 18, 2026
வாகன ஓட்டிகளுக்கு உண்மையான சாலை தங்களுக்கு முன்னால் இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள 3D ஓவியம் குறித்து ஓட்டுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.