சிரிப்பு வாயுவை உள்ளிழுத்து விட்டு வாகனம் ஓட்டிய சாரதி: பிரித்தானியாவில் பறிபோன 3 இளைஞர்கள் உயிர்
வாகன விபத்தில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில், 19 வயது ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் அரங்கேறிய சோகம்
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷையரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், 19 வயது ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலால் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது.
மார்ச்சமில்(Marcham) நடந்த இந்த விபத்தில் டேனியல் ஹான்காக் (Daniel Hancock, 18), ஈதன் கோடார்ட் (Ethan Goddard, 18), மற்றும் எலியட் புல்லன் (Elliot Pullen, 17) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் 19 வயதான தாமஸ் ஜான்சன் என்ற சாரதி, ஆக்ஸ்போர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை உட்கொண்டு, 30 மைல் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் மணிக்கு 100 மைல் வேகத்திற்கும் அதிகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்.
திகிலூட்டும் விவரங்கள்
நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்கள் வழியாக, விபத்துக்கு முன்பாக வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட கைபேசி காணொளியில், இளைஞர்கள் சிரித்துக்கொண்டும் நைட்ரஸ் ஆக்சைடு வாயு நிரப்பப்பட்ட கேனிஸ்டர்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதும், சாரதியான தாமஸ் ஜான்சன் பலூனில் வாயுவை உள்ளிழுத்துக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
Elliot Pullen
Ethan Goddard
மேலும் அதிவேகத்தில் கார் வளைவில் திரும்பியபோது டயர்கள் உராய்ந்து எழுப்பிய பயங்கர சத்தமும் அதில் பதிவாகியுள்ளது.
விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்ற தாமஸ் ஜான்சன், தனக்கு எதுவும் நினைவில்லை என்றும், நைட்ரஸ் ஆக்சைடு பயன்பாட்டின் ஆபத்துகள் தனக்குத் தெரியும் என்று பொலிஸார் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
Daniel Hancock
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |