சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த விபத்து: இளைஞரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள சுரங்கப்பாதை ஒன்றில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, விரைந்து செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்த இளைஞர் ஒருவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள வெர்னியர் என்னுமிடத்தில் வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம், அந்த சுரங்கப்பாதையில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
கார்கள் மோதிக்கொண்டதில் ஒரு கார் தீப்பற்றி எரிய, இளைஞர் ஒருவர், அருகிலிருந்த ட்ரக் ஒன்றிலிருந்த தீயணைப்புக் கருவியை எடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வரும் முன், அந்த இளைஞரே தீயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்.
அந்த விபத்தால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், அந்த இளைஞரின் உடனடி நடவடிக்கையால் விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
விரைந்து செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்த அந்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |