கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவின் கண்ணீர் பேட்டி
கோயம்புத்தூரின் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஷர்மிளா, முதல் பெண் ஓட்டுநரான இவர் கடந்த மூன்று மாதங்களாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஷர்மிளாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், இன்று காலை திமுக எம்.பி-யான கனிமொழி ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்ததை தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எம்.பி கனிமொழி பயணித்தபோது பயணச்சீட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
சுயவிளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்ததாகவும், நடந்த விடயங்களை எவ்வளவோ எடுத்துகூறியும் தங்களையே குறைகூறிக் கொண்டிருந்ததாகவும் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி வருவது குறித்து முன்கூட்டியே மேலாளரிடம் தான் தெரிவித்துவிட்டதாகவும், கனிமொழி எம்.பி-யுடன் வந்தவர்களிடம் நடந்துனர் கடுமையான நடந்து கொண்டதை தான் கண்டித்ததால் இப்படி நடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கனிமொழி எம்.பி பயணச்சீட்டு எடுத்தே தன்னுடன் பயணித்தார் என்றும், சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர் கண்டிப்புடன் நடந்து கொண்டதாகவும், தன் பக்கமுள்ள நியாயத்தை கேட்கக்கூடவே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.