முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா? காவலரை மிரட்டிய வடமாநில ஓட்டுநர்
முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா என காவலரை வடமாநில லொறி ஓட்டுநர் மிரட்டிய வீடியோ இணையத்த்தில் வைரலாகி வருகிறது.
லஞ்சத்திற்கு எதிராக முதல்வர் விஜய்
தமிழக முதல்வராக உள்ள விஜய், லஞ்சம் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவேன் என உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில் கரூரில் பேசிய முதல்வர் விஜய், "யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறன்.

இதை மீறி யாராவது கட்டாயப்படுத்தினால், இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜியோட ஆட்சி என்று உறுதியாக சொல்லுங்கள்" என பேசினார்.
அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் உடனடியாக 94981 80936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு dvac@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு அல்லது 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய எண்களுக்கும் புகார் தெரிவிக்கலாம்.
காவலரை மிரட்டிய வடமாநில ஓட்டுநர்
இந்நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த லொறி ஓட்டுநர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள காவலரிடம் தளபதிக்கு விஜய் கிட்ட சொல்லட்டுமா என மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அபராதம் விதிக்கும் மெஷின் உடன் உள்ள காவலர் பில் எங்கே? நான் சோதனையிட வேண்டும் என கேட்கிறார்.
North Indian truck driver used just name of @TVKVijayHQ to stop this Police from taking bribe 🙏🙏
— Iʀsʜᴀᴅ (@irshad5005) July 21, 2026
Driver : Take a photo, Vijay Thalapathy ji.
Driver : Look, our container is empty, there isn't even a seal on it...
Police Officer : Hey, let me check it first. Where is the… pic.twitter.com/UabFQjR7Hn
அதனை வீடியோ எடுக்கும் வட மாநில லொறி ஓட்டுநர், "என் லாரியின் கண்டெய்னர் காலியாக இருக்கிறது. அதில் சீல் கூட இல்லை. ஆனால் இந்த காவலர் அபராதம் விதிக்கும் வகையில் பணம் கேட்கிறார். தளபதி விஜய் நம்பர் என்னிடம் இருக்கிறது. நான் இதை அவருக்கு அனுப்பி புகாரளிக்கிறேன்" என கூறுகிறார்.
இந்த வீடியோவை தவெகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |