7 மணி நேரம் காத்திருந்து வெறுங்கையுடன் திரும்பிய கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ
பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தில் இருந்து வரும் நிலையில், கால்பந்து உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாரதி 7 மணி நேரம் காருடன் எரிபொருளுக்காக காத்திருந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ குடியிருக்கும் பகுதிக்கும் ஒரு மைல் தொலைவிலேயே பெட்ரோலுக்காக 220,000 பவுண்டுகள் மதிப்புள்ள பென்ட்லி வாகனத்துடன் அவரது சாரதி காத்திருந்துள்ளார்.
மட்டுமின்றி, ரொனால்டோவின் பாதுகாப்பு குழுவினரும் இன்னொரு வாகனத்தில் அப்பகுதியில் காணப்பட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி 2.20 மணி முதல் காருடன் பெட்ரோல் நிரப்ப ரொனால்டோவின் சாரதி காத்திருக்க தொடங்கியுள்ளார்.
ஆனால் சுமார் 7 மணி நேரம் காத்திருந்தும் ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், குறித்த சாரதி இரவு 9 மணிக்கு அங்கிருந்து கிளம்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணவும் வசதி வாய்ப்புகளும் இருந்தும் ரொனால்டோவும் தற்போது சாதாரண பிரித்தானியர்கள் போன்று பெட்ரோலுக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ரொனால்டோவின் பாதுகாப்பு குழுவும் பெட்ரோலுக்காக பல மணி நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.