பிரான்சில் வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவர்களுக்கு புதிய தண்டனை
பிரான்சில் வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவர்களுக்கு புதிய தண்டனை ஒன்று விதிக்கப்பட உள்ளது.
ஆம், பிரான்ஸ் சாரதிகள் பலர் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை இழக்க இருக்கிறார்கள்!
மொபைல் பயன்படுத்துவர்களுக்கு புதிய தண்டனை
பிரான்ஸ் போக்குவரத்து விதிகளின்படி, வாகனம் ஓட்டும்போது சாரதியின் கையில் மொபைல் இருந்தாலோ, ஹெட்போன் அணிந்திருந்தாலோ அல்லது மொபைல் திரையைத் தொட்டாலோ, 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில், பிரான்சில் பல பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவர்களுக்கு ஏற்கனவே உள்ள தண்டனைகளுடன் புதிய தண்டனை ஒன்று கூடுதலாக சேர்க்கப்பட உள்ளது.
ஆம், வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவர்களின் ஓட்டுநர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது.
இந்த விதி ஏற்கனவே பிரான்சின் பல பகுதிகளில் அமுலுக்கு வந்துவிட்ட நிலையில், இதுவரை சுமார் 500 சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே, சாரதிகள், மொபைலில் வழி கண்டுபிடிக்கவேண்டுமானால், வாகனம் புறப்படும் முன்பே மொபைலில் அது தொடர்பான விடயங்களை தயாராக வைத்துக்கொண்டு பின் வாகனத்தை இயக்குமாறும், ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி மொபைலில் தக்க மாற்றங்களை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |