லண்டனில் ஸ்தம்பித்த உணவு விநியோகம்: போராட்டத்தில் குதித்த 3,000 சாரதிகள்
லண்டன் மற்றும் பிரைட்டன் பகுதியில் Deliveroo உணவு விநியோக சாரதிகள் திடீரென்று சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாரதிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில்
ஊதிய உயவு கோரி வெள்ளிக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் Just Eat மற்றும் Uber Eats நிறுவன சாரதிகளும் கலந்துகொண்டுள்ளனர். சுமார் 3,000 சாரதிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டமானது மதியத்திற்கு மேல் 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் நீடித்துள்ளது.
@pa
பிரைட்டனில், வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக வெஸ்டர்ன் ரோடு மற்றும் லண்டன் ரோட்டில் உள்ள McDonald's கடைகளுக்கு வெளியே சாரதிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் Deliveroo நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், அவர்கள் மதிக்கும் நெகிழ்வான பணியையே வழங்கி வருவதாகவும், அத்துடன் வேலை பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, சாரதிகள் எப்பொழுதும் குறைந்தபட்சம் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை சம்பாதிக்கிறார்கள், அத்துடன் அவர்கள் எங்களுடன் பணிபுரியும் காலத்திற்கு அவர்களின் வாகனச் செலவுகளையும் ஏற்கிறோம்.
தாமதமாகவே உணவு விநியோகம்
இருப்பினும் பெரும்பான்மையானவர்கள் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். சாரதிகளுக்கு இலவச காப்பீடு வசதியும் அளிக்கப்படுகிறது. பணி நேரத்தில் விபத்தில் சிக்கினாலோ அல்லது காயமடைந்தாலோ, அல்லது சுகவீனமாக இருக்கும் போதும், வேலை செய்ய முடியாத நெருக்கடி ஏற்படும் போதும் பயன்படும் வகையில் காப்பீடு வசதி முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கமளித்துள்ளார்.
@reuters
இதனிடையே, Deliveroo நிறுவன இணைய பக்கத்தில், தங்களின் சேவை மிக விரைவில் மீட்கப்படும் என்றும், தற்போது சிக்கலை எதிர்கொள்வதாகவும், பதிவு செய்தவர்களுக்கு தாமதமாகவே உணவு விநியோகம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
வெள்ளிக்கிழமை நடந்த இந்த திடீர் போராட்டத்தில் நாடு முழுவதும் 3,000 சாரதிகள் கலந்து கொண்டு உணவு விநியோகத்தை முடக்கியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |