பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி
பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள், பிரெக்சிட்டுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, தங்கள் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் பெரும் குழப்பமான மன நிலையில் இருந்துவந்தார்கள்.
பிரெக்சிட்டுக்குப் பிந்தைய ஓட்டுநர் உரிமம் தொடர்பான பிரச்சினை பிரான்ஸ் வாழ் பிரித்தானியர்களுக்கு பெரும் தலைவலியாகவே இருந்துவந்தது. இந்நிலையில், தற்போது அந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துள்ளது.
ஆம், நேற்று பிரித்தானிய ஓட்டுநர் உரிமங்களை பிரான்சில் பயன்படுத்துவது தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரீஸிலுள்ள பிரித்தானிய தூதரகம் இது தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தை பிரான்சில் பயன்படுத்துவது மற்றும் மாற்றம் செய்வது தொடர்பில் பிரித்தானியாவும் பிரான்சும் நடவடிக்கை எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, உங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமம் 2021 ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் விநியோகிக்கப்பட்டதாக இருந்தால், அது எப்போது வரை செல்லத்தகுமோ, அதுவரை அதை நீங்கள் பிரான்சில் பயன்படுத்தலாம்.
உங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமம் காலாவதியாகியிருந்தால், அல்லது காலாவதியாகப்போகிறது என்றால், நீங்கள் பிரெஞ்சு ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். அப்போது உங்களுக்கு தற்காலிக ஆவணம் ஒன்று கொடுக்கப்படும், உங்கள் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும் வரை நீங்கள் இந்த ஆவணத்தைப் பயன்படுத்தி பிரான்சில் வாகனம் ஓட்டலாம்.
உங்கள் ஓட்டுநர் உரிமம் 2021 ஜனவரி 1க்குப் பின் விநியோகிக்கப்பட்டதாக இருந்தால், அதையே நீங்கள் உங்கள் வாழிட உரிமம் வழங்கப்பட்டதிலிருந்து ஒரு ஆண்டுக்கு பயன்படுத்தலாம். மேலதிக தகவல்களுக்கு... https://www.thelocal.fr/20210624/post-brexit-deal-announced-for-driving-licences-of-brits-in-france/